திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிவேடு பகுதியில் நாகார்ஜுனா (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 45 தினங்களுக்கு முன்பாக விஷ்வ பிரியா (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் சம்பவ நாளில் மோட்டார் சைக்கிளில் திருவேற்காடு பகுதிக்கு சென்றனர். அதாவது விஷ்வ பிரியா தன் கணவருடன் தாய் வீட்டிற்கு பைக்கில் சென்றார். இவர்கள் கவரப்பேட்டை-சத்தியவேடு சாலை அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நாகார்ஜுனா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்த நிலையில் நாகார்ஜுனா லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார். ஆனால் விஸ்வ பிரியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.