கோவை மாவட்டத்தில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராதாமணி என்ற மனைவியும் 21 வயதில் நதீன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் நதீன் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் நதீன் கல்லூரிக்கு சென்று விட்டு  வழக்கம்போல் வீட்டிற்கு  திரும்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவருடைய தாயார் வழக்கம்போல் மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில் நீண்ட நேரமாக கதவை தட்டினார். ஆனால் அவருடைய மகன் கதவை திறக்காததால் பின்னர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அப்போதுதான் அவருடைய மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.