
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி கூறியதாவது, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என ஒன்றிய அமைச்சரே பேசுவது வெளிப்படையான மிரட்டல்.
அனுதினமும் எந்தெந்த வழிகளில் இந்தியை திணிக்கலாம் என்று திட்டம் திட்டிக் கொண்டிருக்கும் பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் தான் புதிய கல்விக் கொள்கை. 40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவது தான் பாஜகவின் அரசியலா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.