
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் முன்னதாகவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னனை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக திகழ்கிறது. அதேபோன்று பிற மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்பிறகு இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வருகிற 16-ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பருவ மழையை முன்னிட்டு தற்போது தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளுக்கு தலைமை கழகம் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்த பருவ மழை காலத்தின் போது பொதுமக்கள் அனைவருக்கும் திமுக நிர்வாகிகள் முன்னின்று உதவ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு அவசர நேரத்தில் எந்த நேரத்திற்கும் களத்திற்கு வர தயாராக இருக்க வேண்டும். அரசுத் தரப்பில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருந்தாலும் குறைந்தபட்ச தேவைகளை தயார்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட, ஒன்றிய, பகுதி வடகிழக்கு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு திமுக தலைமை கழகம் பருவமழையை முன்னிட்டு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.