திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த இரு வீட்டாரும் மணிகண்டனையும், அந்த பெண்ணையும் கண்டித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மோட்டார் சைக்கிள் மூலம் தேனிக்கு வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அவர்கள் குன்னூர் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு போடிநாயக்கனூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.