கிருஷ்ணகிரி மாவட்டம் அட்ட பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(62). இவர் கல் உடைக்கும் கம்ப்ரஸர் டிராக்டர் வைத்து வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரோஜா. ராஜேந்திரன் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார்.

அப்போது சரோஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது.

இதனை அறிந்த ராஜேந்திரன் இருவரையும் பலமுறை கண்டித்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு சரோஜாவும், மாதேஷும் தனிமையில் இருந்தனர். இதனை பார்த்த  ராஜேந்திரன் கோபத்தில் மாதேஷை சுட்டு கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.