தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழ் செல்விக்கும் திருச்செந்தூரைச் சேர்ந்த கன்னி முத்து என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழ்செல்வி கன்னிமுத்து உடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் கோபமடைந்த கன்னி முத்து கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்ச்செல்வியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கன்னிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் கன்னிமுத்துவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.