திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவாட்டு பேட்டையில் பரணிகுமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி (40) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அடிக்கடி இருவரும் சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். இதில் ஏற்கனவே ஜோதிக்கு 2 முறை திருமணம் ஆகி இரண்டு கணவர்களும் பிரிந்து சென்று விட்டனர். அவருக்கு மாதேஷ் (19) என்ற மகன் இருக்கிறார்.

இதற்கிடையில் ஜோதி மற்றும் பரணிகுமார் இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கு ஒன்றில் கைதான பரணிகுமார் கடந்த மார்ச் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்து பெண் பார்த்துள்ளனர். இது தொடர்பாக ஜோதிக்கும் பரணி குமாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இருவருக்கும் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தகராறு ஏற்பட்ட நிலையில் ஜோதியை அவர் தாக்கியுள்ளார். இதை பார்த்த மாதேஷ் கோபமடைந்துள்ளார் அதன் பிறகு வெளியே சென்ற பரணி குமாரை மாதேஷ் மற்றும் அவருடைய நண்பரான 17 வயது சிறுவனும் சேர்ந்து சிங்காரத்தோப்பு நுழைவு வாயில் அருகே அவரை கத்தியால் சரம் மாறியாக குத்தியுள்ளனர்.

இவர்களுடன் சேர்ந்து ஜோதியின் தந்தையான மனோகரனும் (60) அவரைக் கத்தியால் குத்தியுள்ளரார்‌. இதில் பரணி குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்தபோது பரணிகுமார் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாதேஷ், மனோகரன், ஜோதி மற்றும் 17:வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.