
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட மாதேஷிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது ஆன்லைன் மூலம் மெத்தனால் விற்பனை செய்யும் தொழிற்சாலைகளை கண்டுபிடித்து ஜிஎஸ்டி வரி இல்லாமல் மாதேஷ் மெத்தனால் வாங்கியுள்ளார்.
இவரிடமிருந்து சின்னதுரை மெத்தனாலை வாங்கியுள்ளார். அவர் சாராயத்தை சேர்க்காமல் தண்ணீரில் வெறும் மெத்தனால் மட்டுமே கலந்து விற்பனை செய்துள்ளார். இவரிடமிருந்து கோவிந்தராஜன் என்பவரும் மெத்தனாலை வாங்கி தண்ணீர் கலந்து விற்பனை செய்துள்ளார். பொதுவாக சாராயத்தை காய்ச்சி அதில் போதையை அதிகப்படுத்துவதற்காக மெத்தனால் கலக்கப்படுவது வழக்கம். ஆனால் இங்கு சாராயமே இல்லாமல் தண்ணீரில் வெறும் மெத்தனால் மட்டுமே கலந்து விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.