
சென்னையில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை காவல்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை காவல் துறையில் நான்கு மண்டலங்களுக்கும் செல்போன் எண்களை சென்னை காவல்துறை கொடுத்துள்ளது. அந்த செல்போன் எண்களை பயன்படுத்தி வாட்ஸ் அப் மூலமாக அல்லது கால் செய்து தகவல் தெரிவிக்கலாம். இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கொண்ட தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள்
• மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மேற்கு மண்டலம் (PEW West) – செல்பேசி எண்- 90423-80581.
• மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தெற்கு மண்டலம் (PEW South)- செல்பேசி எண் – 90424-75097.
• மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கிழக்கு மண்டலம் (PEW East) – செல்பேசி எண்-63823-18480.