கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மேலும் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களுடைய உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காது கேட்காமல் போனதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் அடுத்து கண் பார்வை பறிபோய் உயிர் போனதாகவும் கூறியுள்ளனர். இணை நோய் காரணமாக உயிரிழப்பு என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் சிலருக்கு எந்தவித இணை நோய்களும் இல்லை என உறவினர்கள் கூறியுள்ளனர்.