
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்ததில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் குடித்ததில் 39 பேர் பலியான நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய நேற்று சில அமைச்சர்கள் கள்ளக்குறிச்சிக்கு சென்ற நிலையில் இன்று அமைச்சர் உதயநிதி கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளார்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10,00,000 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று கள்ளச்சாராயம் குடித்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.