இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். கடந்த 22ஆம் தேதி 18 வது ஐபிஎல் சீசன் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி மோதியது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நூர் அகமது 4 விக்கெட்டுகளும் கலீல் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்நிலையில் போட்டியின் போது கலீல் அகமது தன்னுடைய கையில் இருந்த ஒரு பொருளை ருதுராஜிடம் கொடுக்க அவர் அதனை வாங்கி தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவர்கள் பந்தை சேதப்படுத்திவிட்டு மறைத்ததாக கூறினார்கள்.

“>

ஆனால் தற்போது தான் உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது கலில் அகமது தன்னுடைய கையில் இருந்த மோதிரத்தை தான் கழட்டி ருதுராஜிடம் கொடுத்துள்ளார். பந்து வீசுவதற்கு இடையூறாக இருக்கும் என்பதால் மோதிரத்தை கழட்டி கொடுத்துள்ளார். ஆனால் அதற்குள் ரசிகர்கள் அவர்கள் பந்தை சேதப்படுத்தி விட்டதாகவும் எனவே அவர்கள் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைதளத்தில் பதிவிட ஆரம்பித்து விட்டனர். மேலும் எந்த ஒரு விஷயத்தையும் தீர விசாரிப்பதற்கு முன்பாக இப்படி புரளியை கிளப்ப கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்..