பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் “ஷர்பத் ஜிஹாத்” புதிய வார்த்தையை பயன்படுத்தியதால் பொது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகிய ஒரு வீடியோவில் சில நிறுவனங்கள் விற்கும் சர்பத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் கட்டப்படுவதாகவும் அதே நேரத்தில் பதஞ்சலியின் ரோஜா சர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த வீடியோ பதஞ்சலி ப்ராடக்ட் என்னும் பெயரில் பகிரப்பட்டு “ஷர்பத் ஸகாத்” மற்றும் குளிர்பானம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் “கழிப்பறை தூய்மை செய்யும் விஷத்திலிருந்து உங்களுடைய குழந்தைகளை பாதுகாப்பீர்கள்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ராமதேவ் கூறுகையில், “வெயிலுக்கு தீர்வு காணும் விதமான மக்கள் குளிர்பானங்களை  குடிக்கிறார்கள். அவை கழிப்பறை தூய்மை செய்யும் சாயம் போன்ற விஷம். மற்றொரு பக்கம் சில நிறுவனங்கள் விற்கும் சர்பத்தின் லாபத்தில் மதரஸாக்கள் கட்டப்படுகிறது. அது அவர்களுடைய உரிமை அவர்களுடைய மதம். ஆனால் பதஞ்சலி ரோஜா சர்ப்பத்தை வாங்கிப் பருகினால் அது குருகுல், பதஞ்சலி யுனிவர்சிட்டி, பாரதீய கல்வி வாரியம் போன்றவற்றிற்கு ஆதரவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.  இது தற்போது பெரும்  கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்பு மருத்துவ நோய்களுக்கு பதஞ்சலி மருந்துகள் தீர்வு அளிக்கும் என்ற பொய்யான விளம்பரத்துக்காக ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் மன்னிப்பு கேட்க உத்திரவிட்ட சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.