தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் வெளுத்து வாங்கியவர்களில் முக்கியமானவர் கவுண்டமணி. இவர் தற்போது “ஒத்த ஓட்டு முத்தையா” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, வையாபுரி, நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை பல படங்களில் எழுதிய துணை இயக்குனரும் இணை இயக்குனருமான சாய் ராஜகோபால் தான் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு பிப்ரவரி 4-ஆம் தேதி நடக்கும் என்று பட குழு அறிவித்துள்ளது.