மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய புகழேந்தி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் இந்தி புகுத்தும் பாணியில் ஒரே கல்வி கொள்கை திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், பல மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தமிழகம் ஏற்க மறுப்பதை ஒப்புக்கொள்ள முடியாது எனவும் கல்வி நிதி வழங்க முடியாது எனவும் பேசி உள்ளது கண்டனத்திற்குரியது. 1965 ஆம் ஆண்டு வரலாறு தெரியாமல் மத்திய அமைச்சர் பேசிக் கொண்டிருக்கின்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த வரலாற்றை முதலில் தெரிந்து கொண்டு மத்திய அமைச்சருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். உலகிலேயே இந்தியா என்ற நாட்டிலேயே உள்ள தமிழ்நாடு என்ற மாநிலம் மட்டும்தான் மொழிக்காக போராடிய வரலாற்றை பெற்றது.

அது மட்டுமல்லாமல் எண்ணற்ற தலைவர்கள் மொழி போருக்காக இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். என்னுடைய தந்தையார் கூட ஆறு முறை சிறை சென்றுள்ளார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் என எங்களை வளர்த்தவர்கள் அனைவரும் தமிழ் மொழிக்காக போராடி பெருமை சேர்த்தவர்கள். இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது. காக்கா பல இடங்களில் அதிகமாக இருக்கின்றது. அதனால் காக்காவை நாம் தேசிய பறவையாக ஏற்றுக் கொள்ளவில்லை. வண்ணத் தொகை விரித்தாடும்  மயிலை தான் தேசிய பறவையாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எங்கள் தாய்மொழி தேசிய பறவைக்கு சமமானது, உங்களது மொழி காக்கைக்கு சமமானது என்று புகழேந்தி பதிலடி கொடுத்துள்ளார்.