உத்திரபிரதேச மாநிலத்தில் போல நாத் பாண்டே என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகராக இருக்கும் நிலையில் முன்னாள் எம்எல்ஏவும் ஆவார். இவருக்கு 71 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு வீட்டில் மருத்துவர்கள்  கண்காணிப்பில் சிகிச்சையில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மரணத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்திரா காந்தியின் தீவிர ஆதரவாளரான போலநாத் கடந்த 1978 ஆம் ஆண்டு அவருடைய கைதை கண்டித்து போராட்டம் நடத்தி பயணிகள் விமானத்தை கடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.