
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏவும் ஆன ராஜேஷ்குமாருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு புறம்போக்கு நிலங்களை மீட்க சென்று அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக ராஜேஷ்குமார் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ராஜேஷ் குமார் உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மேலும் அப்போது வழக்கு விசாரித்த நீதிமன்றம் ராஜேஷ் குமார் உட்பட 3 பேருக்கும் 3 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 100 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.