காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே.நட்வர் சிங் (93) உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இவரது உயிர் பிரிந்தது.

இவர் கடந்த 1931 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் பிறந்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான UPA அரசியல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இவர் பதவி வகித்துள்ளார். இவருடைய மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.