காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது குமரி ஆனந்தனுக்கு திடீரென மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதாவது வயது மூப்பின் காரணமாக இயற்கை யோகா ஹாஸ்பிடல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மேல் சிகிச்சைக்காக நறுவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.