
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு? பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பிஎஸ்பி கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், செல்வப்பெருந்தகைக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பதால் அவரை காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, இந்த கொலை வழக்கில் திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இந்த வழக்கில் மேலும் பல திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.