இஸ்ரேல் ஹமாஸ் இடையே 28 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதில் சமீப நாட்களாக தரைவழி தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் காசா பகுதியை சுற்றி வளைத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் கூறுகையில் காசா பகுதியை இஸ்ரேல் சுற்றி வளைத்த நிலையில் இனி போர் நிறுத்தம் என்பதற்கு இடமில்லை என கூறியுள்ளார். இந்நிலையில் காசாவை சுற்றி வளைத்த ராணுவ வீரர்களை பைகளில் தான் திருப்பி அனுப்புவோம் என ஹமாஸ் அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.