மும்பையை சேர்ந்த கணவன் மனைவிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் தந்தை ஒரு சிறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தனது கணவரை ஜாமினில் எடுப்பதற்காக அந்த பெண் குழந்தையை விற்று ஒரு லட்ச ரூபாய் பணம் திரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் மாமியார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையை விற்பனை செய்ய உறுதுணையாக இருந்த 8 பேரை கைது செய்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட குழந்தையின் தாயையும் அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் விற்கப்பட்ட குழந்தை கர்நாடகாவில் இருப்பதை அறிந்தனர். அந்த இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு தங்களது பாதுகாப்பில் வைத்துள்ளனர். கணவரை ஜாமீனில் எடுப்பதற்காக பெண் குழந்தையை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது