தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லாத கள்ளக் கூட்டணி வைத்திருக்கின்ற காசு வாங்கிக் கொண்டு கூவும் அந்த முகமூடிகளை கிழித்தெறிந்து மீண்டும் நாம் வெற்றியை உறுதி செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்கு மக்களின் ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கின்றது. ஆட்சியில் மக்களுடைய நலனுக்கான திட்டங்களை அறிவித்து அதனை முழுமையாக செயல்படுத்தும் வகையில் அயராமல் உழைப்பதால் மக்களின் ஆதரவு இன்று பெருகி உள்ளது. இப்படியான நிலையில் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் பாஜக அரசு நமக்குரிய நிதியை வழங்காமல் தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகின்றது.

இருந்தாலும் பாஜக அரசின் பழிவாங்கும் போக்கை எதிர்கொண்டு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை நாம் உயர்த்தி காட்டியுள்ளோம். இந்தியாவின் முதன்மையான மாநிலம் தமிழகம்  என்ற இலக்கை அடைய ஏழாவது முறையும் திமுக ஆட்சி தொடர வேண்டும். அந்த வாய்ப்பை மீண்டும் வழங்குவதற்கு தமிழக மக்கள் தயாராக இருக்கின்றனர். அதேசமயம் அதை கெடுப்பதற்கான சதிகளை செய்யும் அரசியல் சக்திகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகமூடியுடன் வெளியே வரும். தமிழக மக்களுக்கு எதிராக  தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லாத கள்ளக் கூட்டணி வைத்திருக்கின்ற காசு வாங்கிக் கொண்டு கூவும் அந்த முகமூடிகளை கிழித்தெறிந்து மீண்டும் நாம் வெற்றியை உறுதி செய்வோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.