
ஹைதராபாத்தில் காணாமல் போன 1.30 லட்சம் மதிப்புள்ள ஆஸ்திரேலிய கிளியை போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். நான்கு மாதங்களை ஆன காலா என்ற கிளி கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி காணாமல் போனது பற்றி அதன் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார்.
அந்தப் பகுதியில் உள்ள செல்ல பிராணிகள் விற்பனையாளர்களிடம் கிளியின் புகைப்படத்தை காட்டி போலீசார் விசாரணை நடத்திய நிலையில் முப்பதாயிரம் ரூபாய்க்கு ஒருவருக்கு கிளி விற்கப்பட்டது தெரிய வந்தது. ஜூபிளி ஹில்லில் உள்ள செல்லப் பிராணிகள் கடையின் மேலாளர் கிளி இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் உடனடியாக அந்த கிளையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.