
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் என்ற மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாதவ் கஜானந்த் ஜைனத் (40) என்ற ஆசிரியர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மை தற்போது வெளிவந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் ஜாதனின் மனைவி விஜயலட்சுமி மொபைல் எண்ணை பரிசோதித்து பார்த்ததில் மகேஷ் என்பவரை விஜயலட்சுமி காதலித்து வந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
அதன் பிறகு மகேஷ் மற்றும் விஜயலட்சுமியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது தங்களது காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை இருவரும் திட்டமிட்டு கூலிப்படையினரை வைத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.