விழுப்புரம் மாவட்டத்தில் காதலனுக்கு டீ யில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தன் காதலனுக்கு எதற்காக விஷம் கலந்து கொடுத்தார் என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதாவது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 23 வயது வாலிபர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் படித்து வரும் நிலையில் இவர் தன் வீட்டு வாசலில் இ சேவை மையமும் வைத்து நடத்தி வருகிறார். இவர் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் 20 வயது மாணவி மீது காதல் வயப்பட்டார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

.அதாவது இருவரும் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் காதலிக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பெண்ணிடம் காதலன் பேசாமல் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக வாலிபர் பேசாமல் இருந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் தான் தன் காதலனை வீட்டிற்கு அழைத்து வந்த மாணவி டீ யில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த மாணவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மாணவி டீ யில் விஷம் கலந்ததை வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பி அந்த மாணவனிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக நான் ஆசையாக காதலித்த என் காதலனுடன் பெற்றோர் பேசக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் இருவரில் யாராவது விஷம் குடித்தது போன்று நடித்தால் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று என் காதலனிடம் கூறினேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்த நிலையில் என் வீட்டிற்கு அழைத்து சென்றேன். நான் டீ யில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த நிலையில் அதை குடித்த சில மணி நேரத்தில் அவருக்கு வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும்அவரை கொலை செய்யும் எண்ணம் தனக்கு கிடையாது என்று கூறியுள்ளார்.