
விழுப்புரம் மாவட்டம் கீரைக்காரர் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(20). கடந்த 5 ஆண்டுகளாக ராஜ்குமாரும் சிவரஞ்சனி என்பவரும் காதலித்து வந்தனர். சிவரஞ்சனி தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 15-ஆம் தேதி திடீரென சிவரஞ்சனி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவரஞ்சனியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சிவரஞ்சனி ராஜகுமாரிடம் நீண்ட நேரம் செல்போனில் பேசியுள்ளார்.
அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவரஞ்சனி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் போலீசார் ராஜ்குமாரை கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.