
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நந்தியால் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியை ராகவேந்திரா (21 என்ற வாலிபர் ஒருதலையாக கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த வாலிபர் தொடர்ந்து சிறுமிக்கு தொல்லை கொடுத்த நிலையில் அந்த சிறுமி காதலிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அந்த சிறுமி செல்லும் இடமெல்லாம் சென்று வாலிபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில் பலமுறை வாலிபரை அந்த சிறுமி எச்சரித்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சிறுமி தன் பாட்டி வீட்டிற்கு சென்று தங்கினார். அந்த சிறுமி தூங்கிக் கொண்டிருந்தபோது ராகவேந்திரா வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அ
வர் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியின் அறைக்குள் நுழைந்த நிலையில் உயிரோடு சிறுமியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டார். அவர் சிறுமியின் வாயை துணியால் கட்டி விட்டதால் அவரால் உதவிக்கு யாரையுமே கூப்பிட முடியவில்லை. இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்தில் துடிதுடித்து பலியானார். இந்த சம்பவம் அதிகாலை 4 மணியளவில் நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ராகவேந்திராவை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெட்ரோல் ஊற்றி எரிக்கும் போது ராகவேந்திராவுக்கும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் 70% தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.