ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் பகுதியில் சவுக்கத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்பிஏ பட்டதாரியான யாஸ்மின் பானு என்ற 26 வயது மகள் இருந்துள்ளார். இவர் பிடெக் பட்டதாரியான சாய் தேஜா என்பவரை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது இருந்து காதலித்து வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் யாஸ்மின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் கடந்த பிப்ரவரி மாதம் இந்து முறைப்படி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து 13ஆம் தேதி பாதுகாப்பு கேட்டு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் இரு குடும்பத்தினரையும் நேரில் அழைத்து போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் அதன் பிறகு யாஸ்மின் தன்னுடைய குடும்பத்துடன் செல்போனில் பேசி வந்தார்.

இந்நிலையில் யாஷ்மின் தந்தை தனக்கு உடல் நலம் சரியில்லாததால் தன் மகளை வருமாறு அழைத்துள்ளார். இதனால் சாய் தேஜா தன் மனைவியை பெற்றோர் வீட்டில் சென்றுவிட்ட நிலையில் நேற்று முன்தினம் தன் மனைவிக்கு போன் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் அவருடைய மனைவி போனை எடுக்கவில்லை.

அதன் பிறகு அவருடைய தந்தை சவுக்கத் அலி மற்றும் சகோதரர் ஆகியோரும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து நேற்று வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்தவர்கள் யாஸ்மின் தற்கொலை செய்து இறந்துவிட்டதாகவும் அவருடைய சடலம் பிணவறையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

அவர்கள் மிகவும் அலட்சியமாக பதில் கூறிய நிலையில் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சாய் தேஜா உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற நிலையில் தன் மனைவியின் சடலத்தை பார்த்து கதறி துடித்தார்.

இதற்கிடையில் அந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் தலைமறைவாகிவிட்டனர். பின்னர் சாய் தேஜா தன் மனைவியை அவருடைய குடும்பத்தினர் கொலை செய்துவிட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். மேலும் அந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..