தென்காசி மாவட்டத்திலுள்ள கற்குடி கிராமத்தில் திருமலை குமார் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணும் காதலித்தார். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்ற நிலையில் கடந்த சில நாட்களாக திடீரென அந்த இளம் பெண் திருமலை குமாருடன் பழகுவதை தவிர்த்து வந்தார்.
இதனால் அவர் மன வேதனையில் இருந்த நிலையில் திடீரென நேற்று அரிவாளை தூக்கிக்கொண்டு தன் காதலி வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த தன் காதலியுடன் அவர் தகராறில் ஈடுபட்ட நிலையில் பின்னர் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு சென்றுவிட்டார்.
இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருமலை குமாரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணைகள் நடைபெறுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.