
பெங்களூரு அக்ரஹார பகுதி கரலூரு- கண்ணூரு மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மாயாங்க் ரஜனி என்பவர் தங்கி இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாயாங்க் ரஜனி பெங்களூரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து மாயாங்க் ரஜனி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாயாங்க் ரஜனியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது காதலியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, மாயாங்க் ரஜனி நடத்தி வந்த நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.