பெரம்பலூரில் இருந்து திருச்சி மாவட்டம் துறையூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அடக்கம்பட்டி என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்த ஒரு வாலிபர் கோபமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவர் திடீரென பேருந்தில் இருந்து குதித்து நான் சாகப் போகிறேன் என சத்தமாக கூறிவிட்டு கீழே குதித்து விட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தை  நிறுத்துமாறு கூச்சலிட்டனர். அதன்பிறகு பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கி வாலிபரை  மீட்க சென்றனர்.

ஆனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே‌ உயிரிழந்தார். இது தொடர்பாக பாடாலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த வாலிபர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான வினோத் என்பது தெரிய வந்தது. மேலும் இவர் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் அவருடன் ஏற்பட்ட தகராறு கோபத்தில் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்திக்கிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.