கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் இப்ராஹிம் ஹவுஸ் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை  சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரிய வந்தது. இதனால் வாலிபரை அழைத்து அவர் எச்சரித்துள்ளார். இருப்பினும் இப்ராஹிம் தொடர்ந்து அவரின் சகோதரியை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இப்ராஹிம் தன்னுடைய காதலியுடன் பைக்கில் சென்றுள்ளார். இதை பார்த்த முசாமில் அவரை பின்தடைந்து சென்று வழிமறித்து தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து இப்ராஹிம் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இப்ராஹிம்மை அருகில் இருந்தவர்கள் மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்‌. ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைகாக உள்ள முசாமிலை தேடி வருகிறார்கள்.