
கோவை மாவட்டம் மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக சந்தோஷ் (29) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் அவரது காதலிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சம்பவ நாளன்று சந்தோஷ் மயக்க மருந்தை ஊசி மூலம் தனது உடம்பில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையின்ர் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி விசாரணை நடத்தியதில் சந்தோஷ் கேரளாவை சேர்ந்தவர் என்பதும் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது காதலியிடம் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்துள்ளதும் தெரியவந்துள்ளது.