
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த வருடமும் கலந்து கொண்டுள்ளார்.
இவர் தன்னுடைய கையில் கட்டு போட்டுள்ள நிலையில் காயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளார். இவர் மிகவும் அழகான உடையில் சிவப்பு கம்பளியில் அழகு நடை போட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு முன்னதாக மும்பை விமான நிலையத்தில் தன்னுடைய மகள் ஆராதியாவுடன் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ள ஐஸ்வர்யா ராய் சென்றபோது கையில் கட்டுப்போட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.