தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெயில் தணிந்து பல இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அஅதனால் தொடர் கனமழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்ததால் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இன்று காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று 400 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ பூண்டு இந்த 340 ரூபாய்க்கும், பீன்ஸ் 300 ரூபாயிலிருந்து 240 ரூபாய் ஆகவும் குறைந்துள்ளது. அதனைப் போலவே இஞ்சி 220 ரூபாய், மிளகாய் நூறு ரூபாய், கேரட் 90 ரூபாய், உருளைக்கிழங்கு 80 ரூபாய், பீட்ரூட் 78 ரூபாய், சின்ன வெங்காயம் 80 ரூபாய், பெரிய வெங்காயம் 58 ரூபாய், கத்தரிக்காய் 75 ரூபாய், முட்டைக்கோஸ் 50 ரூபாய், முருங்கைக்காய் 80 ரூபாய், தக்காளி 48 ரூபாய்க்கு விற்பனையாகிறது.