தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்  பிரியா பவானி சங்கர் . இவர் தமிழில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசட தபற, பொம்மை, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 மற்றும் டிமாண்டி காலனி 2 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்,  சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், காதலிக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில்,  கல்லூரி முதலாம் வருடம் படிக்கும் போது தான்  காதல் ஆரம்பித்தது.  நான் தங்கியிருந்த விடுதியில் வார இறுதியில் அவுட்டிங் செல்ல 2 மணி நேரம் மட்டுமே அனுமதிப்பார்கள். அப்போது என்னுடைய காதலர் விடுதி உள்ளே காரில் வந்தார். காரில் ஏறி நான் வெளியில் சென்றபோது செக்யூரிட்டி வந்து கார் கண்ணாடியை ஒப்பன் செய்ய சொன்னார்.

அப்போது பையன் கூட எங்க போறன்னு கேட்டார். உடனே என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல, என்னோட டைம், அவுட்டிங் டைம்ல நான் யாருக்கூட வேணாலும் போவேன். எங்கவேணாலும் போவேன். நீங்க வாடர்னை கூப்பிட்டு கேளுங்க எங்க வீட்டுக்கே கால் பண்ணு சொல்லுங்க எனக்கு என்னன்னு சொல்லிட்டேன் என்று சொல்லியதாக கூறியுள்ளார்.