
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு தனியார் கார் ஓட்டுனர் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 18 வயது இளம் பெண் ஒருவர் கார் ஓட்டும் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ளார். இவருக்கு அண்ணப்பா என்பவர் பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி வழக்கம் போல் இளம்பெண் பயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது அண்ணப்பா பயிற்சி கொடுப்பதாக கூறி இளம்பெண்ணை மட்டும் தனியாக காரில் அழைத்து சென்றுள்ளார்.
அதை நம்பி இளம் பெண்ணும் சென்ற நிலையில் திடீரென அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை தள்ளிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நடந்த சம்பவங்களை தான் பெற்றோரிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அண்ணப்பாவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.