நடிப்பு மற்றும் ரேசிங் என இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் பிரபல நடிகர் அஜித்குமார். ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட அஜித் சமீபத்தில் அஜித்குமார் ரேசிங் என்ற புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். தற்போது ரேஸ்க்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் அஜித் அதற்காக துபாய் சென்றுள்ளார். ரேஸ் அணியினருடன் அஜித் இருக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அஜித் குமார் நேற்று ரேஸ் பயிற்சியில் கலந்து கொண்டார். அப்போது அஜித் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அஜித்திற்கு எதுவும் ஆகாமல் உயிர் தப்பி விட்டதாக அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.

https://x.com/Akracingoffl/status/1876595602945089585