
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் உலகமே முடங்கிய நிலையில் லாக் டவுனை யாரும் மறக்கவே முடியாது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் போன்ற சீனாவில் HMPV என்ற புதிய வகை வைரஸ் தொற்று பரவி வருகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை அதிக அளவில் தாக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தொற்று கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கும், அகமதாபாத்தில் ஒரு குழந்தைக்கும், சென்னையில் 2 குழந்தைகளுக்கும் என மொத்தம் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மாறுபட்ட வைரஸ் தொற்று எதுவும் உருவாகவில்லை எனவும் ஏற்கனவே இந்த தொற்றை தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த வைரஸ் தொற்று தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜேபி நட்டா விளக்கம் கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியதாவது, HMPV வைரஸ் தொற்று குறித்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதோடு எந்த ஒரு சவாலான நிலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இது ஒரு புதிய வைரஸ் தொற்று கிடையாது. கடந்த 2001 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் காற்றில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று சுவாசத்தின் மூலமாக பரவுவதால் மாஸ்க் அணிய வேண்டும். இது அனைத்து வயதினரையும் பாதிக்கும். இந்த வைரஸ் தொற்று பாதிப்பு குளிர்காலத்தின் தொடக்கத்தில் சற்று அதிகமாக இருக்கும். மேலும் இந்த வைரஸ் தொற்றினால் 5 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறினார்.