நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நினையில் முன்னணி மருத்துவர் ஆராய்ச்சி இதழான லான்செட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, டெல்லியில் வருட இறப்புகளில் 11.5% அல்லது சுமார் 12000 இறப்புகளுக்கு காற்று மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அகமதாபாத் பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை புனே, சினிமா மற்றும் வாரணாசி உள்ளிட்ட பத்து நகரங்களில் இந்த ஆய்வானது நடத்தப்பட்டது . வருடம் தோறும் இந்த நகரத்தில் காற்று மாசுபாட்டால் சுமார் 33 ஆயிரம் இறப்புகள் நிகழ்த்திருப்பதாக கூறப்படுகிறது.