
நாகை மாவட்டம் கீழ்வேளூர் என்னும் பகுதியில் 59 வயதான பெண் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் பாப்பா கோவில் அருகே உள்ள தர்காவிற்கு வார வாரம் சென்று வருவார். இந்நிலையில் சம்பவ நாளில் தர்காவிற்கு சென்று வீடு திரும்பிய அவர் ஆட்டோவிற்காக சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உங்களை பாதுகாப்பாக அழைத்து செல்கிறேன் என்று கூறினார். அவர் கூறியதை நம்பி அந்த பெண்ணும் இருசக்கர வாகனத்தில் ஏறினார் .
அப்போது அந்த நபர் புதுச்சேரி மெயின் ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னாடி இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் பதட்டம் அடைந்த அந்த பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்து விட்டார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதைத்தொடர்ந்து பலத்த காயத்துடன் அந்தப் பெண் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இவர் அளித்த புகாரின் படி வழக்கு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். மேலும் காவல்துறையின் விசாரணையில் அவர் பெரிய நரியங்குடி பகுதியில் வாழும் சலூன் கடைக்காரர் குமரவேல்(36) என்பது தெரியவந்தது.