தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காலி மது பாட்டில்களை திருப்பிக் கொடுத்தவர்களுக்கு 297 கோடியை திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தொகை விவரங்கள் ஏற்கும் படி இல்லை என்று நீதிபதிகள் ஆட்சேபம் தெரிவித்த நிலையில் தொகையை சரிபார்த்து மீண்டும் அறிக்கை தாக்கல் செய்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.