
நடிகர் பாலையா பெரும்பாலும் பொதுவெளியில் கடுமையாக நடந்து கொண்டு விமர்சனத்தையே பெற்று வருகிறார். அப்படித்தான் தற்பொழுது ஒரு வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தெலுங்கு நடிகரான விஸ்வாக் சென் நடிப்பில் உருவாகியிருக்கும் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்பொழுது கீழே அமர்ந்திருந்த போது அவருக்கு கால் பக்கத்தில் தண்ணீர் பாட்டிலோடு சேர்த்து மற்றுமொரு பாட்டில் இருந்தது.
அது மதுபானம் போன்ற நிறத்தில் இருந்ததால் அதை கண்டபோது ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கி விட்டார்கள். பிறகு மேடை ஏறிய போது நடிகை அஞ்சலியை பாலையா தள்ளிவிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட அஞ்சலி சமாளித்து விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக அதை கண்ட ரசிகர்கள் மதுபோதையில் இப்படி நடந்து கொண்டாரா? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.