
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அருகே மேல்மருவத்தூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 40 பயணிகள் காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.