ராஜஸ்தான் மாநிலத்தில் சந்தா (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்று காலை வழக்கம் போல் தன்னுடைய கணவர், மாமனார் மாமியார் மற்றும் 14 வயது மகனுக்கு காலை நேரத்தில் டீ போட்டு கொடுத்துள்ளார். பின்னர் அவரும் அந்த டீயை குடித்துள்ளார். இதைக் குடித்த சிறிது நேரத்தில் சந்தா, அவருடைய மாமியார் மற்றும் 14 வயது மகன் ஆகிய உயிரிழந்தனர்.

தற்போது மாமனார் மற்றும் அவருடைய கணவர் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்கள். அதாவது டீ தூளுக்கு பதிலாக பூச்சிக்கொல்லி மருந்தை அதில் கலந்தது தான் மரணத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், அறிக்கை வந்த பிறகுதான் இறப்பிற்கான உண்மை காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.