
கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலானது ஜூலை இறுதியில் வெளியிடப்படும் என கால்நடைப் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும்.
660 BVSc இடங்களுக்கு 14,500 பேரும், 100 BTech படிப்புகளுக்கு 3,000 பேரும் விண்ணப்பம் செய்துள்ளார்கள். சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, சின்ன சேலம், உடுமலைப்பேட்டை, தேனி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.