
காவலர்களுக்கான மருத்துவ நிவாரண உச்சவரம்பு ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 8 லட்சம் ஆக உயர்த்தி தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து ரூபாய் 50,000 வரை எடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொத்த பணிக்காலத்தில் 3 முறை ரூபாய் 25 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம் என்ற வரம்பு ரூபாய் 50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது..