மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம். இவர் கோவையில் கட்டப்பஞ்சாயத்திற்காக ரவுடிகளுடன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக அவரை கைது செய்ய போலீசாருக்கு மேலதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலவையில் இருக்கிறது.

இந்நிலையில் சமீபகாலமாக போலீசார் ரவுடிகளின் மீது என்கவுண்டர் நடத்திவரும் நிலையில் பலரை துப்பாக்கியால் சுட்டு பிடிக்கிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு என்கவுண்டர் நடவடிக்கைகள் அதிகரித்துவிட்ட நிலையில் தற்போது ரவுடி வரிச்சூர் செல்வத்தையும் தேவைப்பட்டால் சுட்டு பிடிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அறிந்த ரவுடி வரிச்சூர் செல்வம் காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையா வாழ்ந்துட்டு வரேன்.. கோவை பக்கம் போயே 13 வருஷம் ஆகுது என பேட்டி அளித்துள்ளார்.